சுடச்சுட

  

  விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில்  தானியப் பயிர்களை காயவைப்பதால் விபத்து அபாயம்!

  By DIN  |   Published on : 06th January 2017 01:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் தானியப்பயிர்களை சாலையில் காயவைப்பதால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர்.
   விருதுநகர்- அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் பெரியவள்ளிக்குளம், பாலவநத்தம், நமச் சிவாயபுரம், புளியம்பட்டி முதலான பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் சோளம், கம்பு முதலான தானியப் பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டுள்ளன. பருவமழை பொய்த்ததால், தானிய பயிர்களின் மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
   இந்நிலையில், பகுதியளவு விளைந்துள்ள சோளம், கம்பு போன்ற பயிர்களை அறுவடை செய்த விவசாயிகள் அவற்றை பெரியவள்ளிக்குளம் பகுதியில் அருப்புக்கோட்டை சாலையில் விரித்து காய வைத்துள்ளனர். இதன் மீது பேருந்து போன்ற கனரக வாகனங்கள் ஏறி செல்வதால், தானியங்கள் எளிதில் உதிர்ந்து விடுகின்றன. இதற்காக இச்சாலை முழுவதும் தானியப்பயிர்கள் காய வைக்கப்பட்டுள்ளன. இச்சாலை ராமேசுவரம் வரை செல்ல கூடியது என்பதால் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும்.
    சாலைகளில் விரித்து வைக்கப்பட்டுள்ள தானிய பயிர்களை, பிரித்து எடுக்கும் பணியில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், வாகனங்கள் செல்லும் போது குறுக்கே செல்வதால் விபத்தில் சிக்கிக்கொள்ளும் நிலையுள்ளது. மேலும், இவ்வழியே இரு சக்கர வாகனத்தில் செல்வோர், காய வைக்கப்பட்ட தானியப் பயிர்களால் சறுக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, பெரிய வள்ளிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தானியப் பயிர்களை காய வைக்க உலர் களம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai