சுடச்சுட

    

    விருதுநகர் மாவட்டத்தில் 15.73 லட்சம் வாக்களர்கள்: ஆட்சியர் தகவல்

    By DIN  |   Published on : 06th January 2017 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 15,73,472 வாக்காளர்கள் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் வியாழக்கிழமை தெரிவித்தார்.
     விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் சுருக்கத் திருத்தப் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, மாவட்டத்திலுள்ள ஏழு சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம்  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
     இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் 01.09.2016 முதல் 30.09.2016 வரையிலான சுருக்கத்திருத்தக் காலத்தில் சேர்க்கப்பட்ட தகுதியுள்ள புதிய வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
     இந்த மாதத்தில் வரப்பெற்ற 37,417 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுள்ள 34,632 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி விருதுநகர் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தொகுதி வாரியாக வாக்காளர் நிலவரம்:
     ராஜபாளையம்  
    ஆண்-11,1750, பெண்-11,846, திருநங்கை -20 மொத்தம் -27,616
      ஸ்ரீவில்லிபுத்தூர்  
    ஆண் -1,16,451, பெண்-1,20,080, திருநங்கை-29 மொத்தம்- 236560
      சாத்தூர்  
    ஆண்-1,13,182, பெண்-1,17,258,
    திருநங்கை- 15 மொத்தம்- 230455.
      சிவகாசி  
    ஆண்-1,19,119,பெண்-1,23,654,
    திருநங்கை- 22 மொத்தம்- 2,42,795
     விருதுநகர்  
    ஆண்-1,04,845, பெண்-1,07,542,
    திருநங்கை- 33 மொத்தம் 2,12,420
     அருப்புக்கோட்டை  
    ஆண்- 1,03,644, பெண்- 1,08,209, திருநங்கை-13 மொத்தம்- 211866
     திருச்சுழி  
    ஆண்-1,04,418, பெண்-1,07,334,
    திருநங்கை-8, மொத்தம்- 2,11,760
      மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளிலும் ஆண்- 7,73,409, பெண் 7,99,923, திருநங்கைகள் 140 என மொத்தம் 15,73,472 வாக்காளர்கள் உள்ளனர்.
     புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்கள் அனைவருக்கும் ஜன., 25 அன்று கொண்டாடப்படவுள்ள தேசிய வாக்காளர் தினத்தில் வண்ண வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.
     அதேபோல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் வெள்ளிக்கிழமை (இன்று) முதல் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள தேர்தல் பிரிவில் விண்ணப்பங்களை வழங்கலாம் என ஆட்சியர் அ. சிவஞானம் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai