Enable Javscript for better performance
பாதாள சாக்கடை அடைப்பை சீரமைக்கக் கோரி மனு- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் எல்.பி.எஸ். நகர் மூன்றாவது தெருவில் பாதாள சாக்கடை அடைப்புகளை சீரமைக்க கோரி அப்பகுதியினர் நகராட்சி அலுவலரிடம் வெள்ளிக் கிழமை மனு அளித்தனர்.
       விருதுநகர் நகராட்சி ஆறாவது வார்டில் எல்.பி.எஸ் நகர் உள்ளது. இதில், 3 வது தெரு பகுதியில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மோட்டார் பழுது ஏற்பட்டு இயங்கவில்லையாம். இதனால் கடந்த மூன்று மாதமாக இப்பகுதி மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். பாதாள சாக்கடை ஆள் இறங்கும் தொட்டிகள் சுத்தம் செய்யப்படாத காரணத்தால், கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே, பழுதான மோட்டாரை சீர் செய்து தண்ணீர் வழங்கவும், பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் நகராட்சி அலுவலர்களிடம் நேரில் மனு அளித்தனர். இதையடுத்து, நகராட்சி லாரி மூலம் அப்பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட்டது. மேலும், துப்புரவு பணியாளர்கள் மூலம் பாதாள சாக்கடை அடைப்புகளை சீர் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai