சுடச்சுட

  

  வாக்குச்சாவடி மையம், வட்டாட்சியர் அலுவலகங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட அறிவுறுத்தல்

  By DIN  |   Published on : 07th January 2017 08:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்களில் இறுதி வாக்காளர பட்டியல் வெளியிட வேண்டும் என வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் மீன் வளத்துறை ஆணையர் பியூலா ராஜேஷ் தெரிவித்தார்.
   விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேர்தல் அலுவலர்களுக்கான  கலந்தாய்வு கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் மீன் வளத்துறை ஆணையர் பீலா ராஜேஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம்  முன்னிலையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. அதில், வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த காலத்தில் வரப்பெற்ற மனுக்கள் அனைத்தும் உரிய முறையில் தீர்வு செய்யப்பட்டுள்ளதா நீக்கம் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் உரிய நடைமுறை கள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து பார்வையாளர் ஆய்வு செய்தார். பின்னர், அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் இறுதி வாக்காளர பட்டியல் வெளியிடுவதை உறுதி செய்ய வேண்டும். ஜனவரி 25 அன்று தேசிய வாக்காளர் தினத்தை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பாக கொண்டாடவும், அன்றைய தினமே அனைத்து புதிய வாக்காளர்களுக்கு, வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கவும் உரிய நடவடிக்கை  மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
  ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துக்குமரன், சிவகாசி சார் ஆட்சியர் அமர் குஷ்வாஹா, கோட்டாட்சியர்கள் கிருஷ்ணம்மாள் (சாத்தூர்), செல்வி (அருப்புக்கோட்டை), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பூமி, வட்டாட்சியர் (தேர்தல்) ஸ்ரீதர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai