சுடச்சுட

    

    சிவகாசியில் ஜனவரி 29 ஆம் தேதி மினி மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.
    போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்த காவல் துறை சார்பில் இப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இது குறித்து சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் கே.சரவணக்குமார் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: இப்போட்டியில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் என அனைவரும் கலந்து கொள்ளலாம். சிவகாசி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள காவல் சோதனைச் சாவடி முன்பு தொடங்கும் இப்போட்டி, சிவகாசி இந்து நாடார்கள் விக்டோரியா மேல்நிலைப்பள்ளி வளாகத்தை சென்றடையும். போட்டியின் தூரம் 14 கிலோ மீட்டராகும். போட்டியில் வெற்றி பெறுவர்களுக்கு முதல் பரிசு ரூ. 25 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 15 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். ஆறுதல் பரிசு, சிறப்பு பரிசு, ஊக்கப் பரிசும் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 83000 47811 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai