சுடச்சுட

  

  சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் வெள்ளிக்கிழமை ஹாக்கிவிளையாட்டு குறித்த பயிலரங்கம் நடைபெற்றது.
  உடற்கல்வியியல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வ.பாண்டியராஜன் தலைமை வகித்தார். விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலர் கே.டி.ராஜேகுமார் தொடக்க உரையாற்றினார். அவர் பேசுகையில், இந்தியாவில் பல விளையாட்டுக்கள் இருந்தாலும் ஹாக்கி விளையாட்டு தேசிய விளையாட்டாக அங்கீகாரம் பெற்றுள்ளது.உலகத் தரவரிசையில் இந்திய ஹாக்கி அணி ஆறாம் இடத்திற்கு முன்னேறியிருப்பதற்கு முக்கியக் காரணம் அவர்களுக்கு அளிக்கப்படும் உலகத்தரம் வாய்ந்த மிகச்சிறந்த பயிற்சியாகும். மாணவர்கள் ஹாக்கி போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
  ஹாக்கி விளையாட்டு நடுவர் கேல்வின் டி.குருஸ், ஹாக்கி விளையாட்டில் தற்போது உள்ள விதிமுறைகள், பெனால்டி சூட் அவுட் மற்றும் பெனால்டி கார்னர் குறித்து விளக்கினார். மேலும் நடுவர்கள் அணியக்கூடிய ஆடைகள், விளையாட்டின்போது விதிமீறினால் கொடுக்கப்படும் அடையாள அட்டைகள், நடுவர்களின் சைகைகள் ஆகியவை குறித்து எடுத்துரைத்தார்.
  துறைத் தலைவர் ஏ.ஜான்சன் வரவேற்றார். இணைப் பேராசிரியர் சி.அசோக் நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai