சுடச்சுட

  

  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
   விருதுநகர் ரயில்வே பீடர் சாலையில் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.55 மணிக்கு கஜமுகனை கொண்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோபாலா கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.
  இதை தொடர்ந்து கருட வாகனத்தில் ராமர், சேஷ வாகனத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி வீதி உலா நடைபெற்றது.
  ராமமூர்த்தி சாலை, மாரியம்மன கோயில், மதுரை சாலை, கந்தபுரம் தெரு வழியாக வீதிஉலா வந்த சுவாமிகள் மீண்டும் கோயிலை வந்தடைந்தது. அப்போது திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தநர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
  சாத்தூர்: சாத்தூர் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுகிழமை காலை 7.40க்கு சொர்க்கவாசல் திறக்கபட்டது. தொடர்ந்து பெருமாள் பூதேவி,ஸ்ரீதேவி சமேதமாக சிறப்பு அலங்காரத்தில், நான்கு மாடவீதிகளைச் சுற்றி வந்து, சொர்க்க வாசல் மண்டபத்தில் வீற்றிருந்து அருள் பாலித்தார்.
  ராஜபாளையம்: ராஜபாளையம் திருமலை திருப்பதி தேவஸ்தான கோயிலில் உற்சவர் மலையப்பசுவாமி, ஸ்ரீதேவி பூமாதேவிக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடைபெற்றது. வேட்டைபெருமாள் கோயிலில் காலை மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. மேலும், கோதண்டராமசுவாமி கோயில், சம்பந்தபுரம் சோலைமலைப் பெருமாள் கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai