சுடச்சுட

    

    அருப்புக்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு, பைக் மரத்தில் மோதி 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    அருப்புக்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேஸ்வரன்(24), வேலுச்சாமி(25). இருவரும் பக்கத்து கிராமமான கல்குறிச்சிக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பியுள்ளனர். கல்குறிச்சியிலிருந்து சில கிலோ மீட்டர்கள் சென்ற நிலையில் கட்டுப்பாட்டை இழந்த இவர்களது வாகனம் சாலையோரம் இருந்த பனைமரத்தில் மோதியது.
    மோதிய வேகத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் இருவரது சடலத்தையும் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து அருப்புக்கோட்டை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai