சுடச்சுட

    

    நாரணாபுரத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை

    By DIN  |   Published on : 10th January 2017 05:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகாசி அருகே உள்ள நாரணாபுரம் பர்மா காலனியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரனிடம் திங்கள்கிழமை பொதுமக்கள் மனு அளித்தனர்.  
     அந்த மனுவில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள நாரணாபுரம், பர்மா காலனியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் வழங்கப்பட வில்லை.
      இதனால், நாங்கள் 2 கி.மீ. தூரம் சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை உள்ளது. மேலும், தெரு விளக்குகள் பல நாள்களாக எரியாததால், பெண்கள் இரவு நேரத்தில் வெளியில் வர அச்சப்படுகின்றனர்.
       மேலும், விஷ பூச்சிகளும் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. மேலும், சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai