சுடச்சுட

  

  ஜல்லிக்கட்டுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்: பாஜக எம்.பி. இல.கணேசன் நம்பிக்கை

  By DIN  |   Published on : 11th January 2017 06:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜல்லிக்கட்டுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளதாக பாஜக எம்.பி இல.கணேசன் தெரிவித்தார்.
    ஆய்க்குடி அமர் சேவா சங்கம் சார்பில் ராஜபாளையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் பங்கேற்க வந்த இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அரசு பொங்கல் விடுமுறையை தற்செயல் விடுமுறையாக மாற்றி இருப்பதை கட்டாய விடுமுறையாக மீண்டும் மாற்ற, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளேன். வரும் ஆண்டுகளில் மத்திய அரசு பொங்கல் பண்டிகை நாளில் கட்டாய விடுமுறை நாளாக அறிவிக்கும். இது யாரோ ஒருவர் அளித்த தவறான தகவலால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விரைவில் சரி செய்யப்படும்.
    ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகும் நிலையில் அதுபற்றி விமர்சிக்கக்கூடாது. நீதிபதிகளிடம் இருந்து ஜல்லிக்கட்டுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என  எதிர்நோக்கியிருக்கிறோம் என்றார்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai