சுடச்சுட

  

  தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த திருத்தங்கல்லை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு டெங்கு இருப்பது உறுதியானதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    திருத்தங்கல் அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன்- ராம லெட்சுமி. இவர்களது மகள் காவியா(5). இவருக்கு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, விருதுநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். அங்கு குழந்தைக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டதாம். இது குறித்து, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகம் மாவட்ட சுகாதார துறையினருக்கு தகவல் தெரிவித்தனராம்.   
   இதையடுத்து திருத்தங்கல் அக்ரஹாரம் தெருவில் கொசு ஒழிப்பு பணியில் செவ்வாய்க்கிழமை நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும், சுகாதார குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும், அப்பகுதியினருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கி வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai