சுடச்சுட

  

  நிறுவனங்கள் மீதான வருமான வரியை 15 சதவீதமாகக் குறைக்க கோரிக்கை

  By DIN  |   Published on : 11th January 2017 06:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய அரசு, நிறுவனங்கள் செலுத்த வேண்டிய  வருமான வரியை 15 சதவீதமாகக் குறைக்க வேண்டுமென விருதுநகர் வியாபாரத் தொழில் துறை சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் வி.வி.எஸ். யோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்தியஅரசு பொருளாதார முன்னேற்றத்திற்காக கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வருமான வரி செலுத்தாமல் ஏமாற்றுபவர்களுக்கு தண்டனை அளித்து வருவது பாராட்டுதலுக்குரியது. இந்தியா பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைவதற்கு நாட்டில் உள்ள அனைவரும் வருமான வரியை செலுத்துவதற்கு வசதியாகவும், சிறு தொழில்கள் சிறப்படைவதற்கும், தற்சமயம் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய 30 சதவீதம் என்ற வருமான வரியை  15 சதவீதமாக குறைக்க வேண்டும். மேலும், வரி குறைப்பு செய்வதால் ஏற்படும் வருமான வரி இழபபை தவிர்ப்பதற்கு வசதியாக தற்சமயம் நிறுவனங்களுக்கு அளித்து வரும் 32 வகையான வரிகளை ரத்து செய்து விடலாம். மேலும், நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வருமான வரியை 15 சதவீதமாக நிர்ணயம் செய்து, நிகழாண்டு தாக்கல் செய்யும் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai