சுடச்சுட

  

  ராஜபாளையம் கம்பன் கழகம் சார்பில் கலை இலக்கிய போட்டிகள்

  By DIN  |   Published on : 11th January 2017 06:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராஜபாளையம் கம்பன் கழகத்தின் 37ஆவது ஆண்டுவிழாவையொட்டி மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     ராஜபாளையம் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போட்டிக்கு கம்பன் கழக தலைவர் பி.ஆர்.விஜயராகவராஜா தலைமை வகித்தார். அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளித் தாளாளர் என்.ஏ.அழகராஜா, கம்பன் கழக செயலாளர் என்.எஸ்.ராமராஜா, நிர்வாகிகள் சுகந்தம் என்.எஸ்.ராமகிருஷ்ணன், எம்.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    இப் போட்டிகளில் 798 பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
  இவர்களுக்கு 55 நடுவர்கள் மூலம் கம்பராமாயண செய்யுள் ஒப்புவித்தல், இசை, பேச்சுப்போட்டி, கட்டுரை, விநாடிவினா, ஓவியம், நீதிக்கதை, பாரதியாரின் பாப்பா பாட்டு ஒப்புவித்தல் போன்ற தலைப்புகளில், 17 பிரிவுகளில் திறன்போட்டிகள் நடத்தப்பட்டது.
  இதில், 93 பேர் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.  முனைவர் அப்துல்சமது சிறப்புரையாற்றினார்.
      ஏற்பாடுகளை கம்பன் கழக அறக்கட்டளை நிர்வாகி என்.எஸ்.முத்துகிருஷ்ணராஜா,செயலாளர் பீ.உமாசங்கர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai