Enable Javscript for better performance
நரையன்குளம் ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான மாநில அரசு விருது- Dinamani

சுடச்சுட

    

    நரையன்குளம் ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான மாநில அரசு விருது

    By DIN  |   Published on : 12th January 2017 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை, சிறந்த பள்ளிக்கான விருதை வழங்கியுள்ளது.
    இந்த விருது வழங்கும் விழா நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி, ஆசிரியை பா.பாத்திமா ஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா வரவேற்றார்.
    மாநில அரசின் சிறந்த  பள்ளிக்கான விருதை ஆசிரியர்களிடம் வழங்கி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா முத்தையா பேசியதாவது: பல்வேறு அலுவலர்கள் அடங்கிய குழு, இப் பள்ளியை சிறந்த பள்ளியாக மாநில தொடக்கக் கல்வித் துறைக்கு பரிந்துரைத்துள்ளது. இப் பள்ளிக்கு விருது கிடைத்துள்ளது தொகுதிக்கே கிடைத்துள்ள பெருமையாகும்.
    தொடர்ந்து ஆசிரியர்கள் ஒற்றுமையுடன் பணிபுரிந்து மாணவர்கள் நல்ல குடிமக்களாக உருவாக பாடுபட வேண்டும் என்றார் அவர்.
    நிகழ்ச்சியில் ஆசிரியை ச.பொன்மலர், பள்ளி கிராம கல்விக் குழுத் தலைவி அ.சீத்தாலட்சுமி, உறுப்பினர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் செ.சண்முகநாதன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai