சுடச்சுட

    

    பொங்கல் பொருள்கள் வழங்கக் கோரி நியாய விலைக் கடை முற்றுகை

    By DIN  |   Published on : 12th January 2017 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொங்கல் பொருள்கள் வழங்கக் கோரி புதன்கிழமை நியாய விலைக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
     விருதுநகர் பாத்திமா நகரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நியாய விலைக்கடை உள்ளது. இக்கடையில் பாத்திமாநகர், ஒளவையார் தெரு, முத்துராமலிங்கம் நகர், பாலம்மாள் நகர், கிருஷ்ணமாச்சாரி சசாலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரேஷன் பொருள்களை வாங்கி வருகின்றனர்.
    இந்தக் கடையில் கடந்த 10 நாள்களாக குடும்ப அட்டைக்கான உள்தாள் வழங்கும் பணி நடைபெற்றது.
    இந்நிலையில் தமிழக அரசு பொங்கல் பொருள்கள் வழங்கப்படும் என அறிவித்தது.  விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இத்திட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
    ஆனால், மாவட்டத்திலுள்ள பெரும்பாலான நியாய விலைக் கடைகளுக்கு பொங்கல் பொருள்கள் வந்து சேரவில்லை. மேலும் மாதந்தோறும் வழங்கப்படும் அரிசி, கோதுமை, பாமாயில் சீனி முதலான பொருள்களும் குறைந்த அளவே வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அரசு அறிவித்த இலவச வேஷ்டி சேலையும், வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து இதுவரை  கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.
    இந்நிலையில் விருதுநகர் பாத்திமா நகரில் நியாய விலை கடையில் பொங்கல் பொருள்களை வழங்க கோரி புதன்கிழமை பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திமாநகர் கிளைச் செயலாளர் பி.ராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    தகவலறிந்து வந்த பஜார் போலீஸார், பொது மக்கள் மற்றும் கடை ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    முடிவில், இலவச வேஷ்டி சேலைகள், பொங்கல் பொருள்கள் அனைத்தும் வியாழக்கிழமை முதல் வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai