சுடச்சுட

    

    மண்டல குத்துச்சண்டைப் போட்டி: அருப்புக்கோட்டை மாணவர்கள் சாதனை

    By DIN  |   Published on : 12th January 2017 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் ராமநாதபுரம் மண்டல அளவில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.
    விருதுநகர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகங்கை, தேவகோட்டை, பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 7 கல்வி மாவட்டங்களுக்கிடையிலான ராமநாதபுரம் மண்டல அளவிலான குத்துச்சண்டைப் போட்டிகள் திருப்பத்தூர் மவுண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றன.
    இதில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 14 வயதுக்குட்பட்டோருக்கான 34, 46 கிலோ எடைப்பிரிவுகளில் ஏ.நவீன்குமார் மற்றும் எம்.ராமநாதன் ஆகியோரும், 17 வயதுக்குள்பட்டோருக்கான போட்டிகளில் 54, 57, 66 கிலோ ஆகிய எடைப்பிரிவுகளில் முறையே எம்.சத்தியவேந்தன், வி.முத்துக்குமார் மற்றும் டி.தங்கராஜ் ஆகிய மாணவர்களும், 19 வயதுக்குள்பட்டோருக்கான போட்டிகளில் 40, 75 கிலோ எடைப்பிரிவுகளில் என்.பிரேம்குமார், கே.கார்த்திக் செல்வம் ஆகிய மாணவர்களுமாக 7 மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
    இதன்மூலம் மண்டல அளவில் 64 புள்ளிகளுடன் இப்பள்ளி சாம்பியன் பட்டம் பெற்றது.
    இம்மாணவர்கள் விழுப்புரத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறத் தகுதி பெற்றுள்ளனர்.
    இம் மாணவர்களையும், அவர்களுக்கு பயிற்சியளித்த பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் எம்.செளந்திரபாண்டியன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆர்.கணேஷ்குமார், ஜே.சுரேஷ், வி.புஷ்பராஜ் ஆகியோரையும் எஸ்.பி.கே. கல்விக் குழுமத் தலைவர் எம்.சுதாகர், பள்ளிச் செயலர் என்.வி.காசிமுருகன், தலைமை ஆசிரியர் ஏ.ஆனந்தராஜன் மற்றும் பள்ளி நிர்வாகக் குழுவினர், உறவின்முறை பெரியோர்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai