சுடச்சுட

    

    வட்டாட்சியர் அலுவலகங்களில் பிப். 28 வரை ஆதார் உதவி மையம் செயல்படும்: ஆட்சியர்

    By DIN  |   Published on : 12th January 2017 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தொடங்கப்பட்டுள்ள ஆதார் உதவி மையங்கள் பிப்ரவரி 28 வரை செயல்படும் என ஆட்சியர் அ. சிவஞானம் தெரிவித்தார்.
    அவர் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் ஆதார் அட்டை பதிவு செய்து ஆதார் எண் அல்லது ஆதார் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் மற்றும் ஆதார் அட்டையை தொலைத்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஆதார் உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இம்மையங்கள் பிப்ரவரி 28 வரை செயல்படும்.
    இந்த மையங்களுக்கு பொதுமக்கள் நேரில் சென்று தங்களது பெயர், பிறந்த தேதி, அஞ்சல் குறியீடு எண், கை விரல் ரேகை மற்றும் கருவிழிகளைப் பதிவு செய்து, சில விநாடிகளில் தங்களின் ஆதார் எண்ணை தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த ஆதார் எண்ணை கொண்டு அரசு இ-சேவை மையங்களில் விரல்ரேகை மற்றும் கருவிழியினைப் பதிவு செய்து ரூ.30 கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டையாகவோ அல்லது ரூ.10 மட்டும் செலுத்தி காகிதத்தில் அச்சிட்டோ பெற்றுக் கொள்ளலாம். எனவே ஆதார் எண்ணிற்கு ஒரு முறை பதிவு செய்தவர்கள் மீண்டும் நிரந்தர ஆதார் பதிவு மையத்திற்கு செல்லத் தேவையில்லை என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai