Enable Javscript for better performance
திருத்தங்கலில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருத்தங்கலில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் இளைஞர் கைது

    By DIN  |   Published on : 13th January 2017 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்தங்கலில் வியாழக்கிழமை இளைஞர் ஒருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

      திருத்தங்கல் ஆலாஊரணிப் பகுதியைச் சேர்ந்த ஜெயமுனியசாமி மகன் கார்த்திக் (26). இவர் மீது, திருத்தங்கல் காவல் நிலையத்தில் கொலை வழக்கும், வச்சக்காரபட்டி காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
       எனவே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கார்த்திக்கை கைது செய்ய உத்தரவிட்டார்.
     அதையடுத்து, காவல் ஆய்வாளர் ராஜா, அவரைக் கைது செய்தார். பின்னர், மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai