சுடச்சுட

    

    ராஜபாளையத்தில் 3 பேரை அரிவாளால் வெட்டிய 4 பேர் மீது வழக்கு

    By DIN  |   Published on : 13th January 2017 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராஜபாளையத்தில் 3 பேரை அரிவாளால் வெட்டி தாக்கிய 4 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
      ராஜபாளையம் துரைச்சாமியாபுரத்தைச் சேர்ந்த அய்யனார் மகன்கள் தங்கபாண்டி (38) மற்றும் மகேந்திரன். இருவரும் தங்களது பூர்வீக வீட்டில் வசித்து வரும் சகோதரி ஆனந்தவல்லியிடம் பங்கு கேட்டதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
      இதனால், பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜசேகர், இவரது மனைவி உமாமகேஸ்வரி, சகோதரர் கார்த்திக் ஆகிய மூவரும் தங்கபாண்டியை கண்டித்துள்ளனர். இதில்  ஆத்திரமடைந்த தங்கபாண்டி, இவரது தம்பி மகேந்திரன், முத்துபாண்டி மற்றும் குடைமுத்தையா ஆகிய 4 பேரும் சேர்ந்து, ராஜசேகர், உமாமகேஸ்வரி, கார்த்திக் ஆகி ய 3 பேரையும் அரிவாளால் வெட்டி தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த கார்த்திக் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்ற இருவரும், ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  
      இது குறித்து ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய போலீஸார், தங்கபாண்டி, மகேந்திரன், முத்துபாண்டி, குடை முத்தையா ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai