சுடச்சுட

  

  ஸ்ரீவிலி.யில் தலைக்கவசம் அணிந்து பைக் ஓட்டி வந்தவர்களுக்கு பரிசு

  By DIN  |   Published on : 13th January 2017 08:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஸ்ரீவில்லிபுத்தூரில் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு வியாழக்கிழமை காவல் துறை சார்பில் பரிசு அளிக்கப்பட்டது.
    தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சி. சின்னையா, நகர் காவல் ஆய்வாளர் ஜே. மகேஷ்குமார் ஆகியோர் தலைமையில், போக்குவரத்துப் போலீஸார் நகரின் முக்கிய சந்திப்புகளில் தலைக்கவசம் அணிந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு இனிப்பு மற்றும் பரிசையும் வழங்கினர்.  அதேநேரம், தலைக்கவசம் அணிந்து வராதவர்களுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களையும் வழங்கினர். மேலும், பேருந்து நிலையம், பள்ளிப் பகுதிகளில் போக்குவரத்துப் போலீஸார் தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.   இதற்கான ஏற்பாடுகளை, போக்குவரத்து காவல் சார்பு-ஆய்வாளர் கோமதிசங்கர் செய்திருந்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai