சுடச்சுட

    

    வத்திராயிருப்பு அரசு ஆதிதிராவிடர் நல விடுதியில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு

    By DIN  |   Published on : 14th January 2017 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா வத்திராயிருப்பு அரசு ஆதிதிராவிடர் நல விடுதியை, தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மு. சந்திரபிரபா முத்தையா வெள்ளிக்கிழமை திடீரென ஆய்வு செய்தார்.
      விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார். அப்போது, விடுதியில் பராமரிக்கப்படும் சுத்தம் மற்றும் சுற்றுப்புற சுகாதாரத்தைப் பார்வையிட்ட அவர், விடுதிக் காப்பாளரிடம் மாணவிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொண்டார்.
       மாணவிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அவர், மாணவிகளை சிறப்பாக படித்து முன்னேறவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
      அப்போது அவருடன், அதிமுக ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியப் பொருளாளர் த. முத்தையா, வத்திராயிருப்பு ஒன்றியச் செயலர் சுப்புராஜ் உள்ளிட்டோர் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai