சுடச்சுட

  

  சாத்தூரில் மணல் மேட்டுத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  சாத்தூரில் மாட்டுப்பொங்கலன்று பாரம்பரிய விழாவான மணல் மேட்டுத்திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படும். ஆண்டு முழுவதும் தீப்பெட்டி தொழிற்சாலைகளிலும், அச்சகங்களிலும், பட்டாசுத் தொழிற்சாலைகளிலும் ஓய்வின்றி உழைத்து வரும் தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இத்திருவிழா மூலம் புது உற்சாகம் ஏற்படும். பொதுமக்கள் அனைவரும் தங்கள் உறவினர்களுடன், வைப்பாற்றுக்கு சென்று விளையாடி மகிழ்வார்கள். இவ்விழாவில் சாத்தூரை சேர்ந்தவர்கள் எந்த ஊரில் இருந்தாலும், தவறாமல் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டு மணல் மேட்டுத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  விழாவில் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 18 கிராம மக்களும், சிவகாசி,விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வைப்பாற்று படுகையில் மதியம் 4 மணி முதல் இரவு 6மணி வரை மக்கள் தங்கள் வயது கவலைகளை மறந்து உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். காவல்துறை துணை கண்கானிப்பாளர் குமார் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  மணல் மேட்டு திருவிழாவிற்காக சென்னையிலிருந்து வந்த சதீஷ் குடும்பத்தினர் கூறியதாவது: சென்னையில் காணும் பொங்கலன்று அனைவரும் மெரினா கடற்கரைக்கு செல்வது வழக்கம். அதைப்போன்று சாத்தூரிலும் வைப்பாற்றுக்கு சென்று விளையாடி மகிழ்வது மகிழ்ச்சியாக உள்ளது. வைப்பாற்றில் தற்போது அதிகமாக முள்செடிகள் அதிகம் வளர்ந்துள்ளன. இதனால் இந்தாண்டு கூட்டம் குறைவாக உள்ளது. இந்த பாரம்பரிய நிகழ்ச்சி தவறாமல் நடைபெற முன்னதாகவே வைப்பாற்றை பொதுப்பணித்துறையினர் சுத்தம் செய்ய வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai