திருப்பத்தூரில் சமத்துவபுரத்தில் பொங்கல் விழா
By DIN | Published on : 16th January 2017 12:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருப்பத்தூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.
பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் சமாதானப் புறா நேரு இளைஞர் நற்பணி மன்றத்தாரால் நடத்தப்பட்ட இவ்விழாவுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை வகித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினார். பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள், பஞ்சாப்நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மைய இயக்குநர் குறிஞ்சிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன், கே.ஆர்.நமச்சிவாயம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக சமாதானப்புறா இளைஞர் மன்றத் தலைவர் பிரபாகரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் வினோத்குமார், முத்துப்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராகவன் நன்றி கூறினார்.