சுடச்சுட

    

    ராஜபாளையம் பகுதி கோயில்களில் தை முதல் நாளை முன்னிட்டு சனிக்கிழமை கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
      முடங்கியார் ரோடு அருகேயுள்ள பத்ரகாளியம்மன் கோயில், கூரைப் பிள்ளையார் கோயில் தெரு அருகேயுள்ள பட்டாணி கோயில் குலதெய்வமாக வழிபாடு நடத்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் இரவு பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். நள்ளிரவு சிறப்பு பூஜை நடைபெற்றது. இரவு அண்ணாமலை ஈஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி சுவாமி அம்மன் வீதி உலா நடைபெற்றது.
      முன்னதாக காலையில் மாயூரநாதசுவாமி கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சுவாமி அம்மனுக்கு புத்தாடைகள் அணிவித்து பொங்கலிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai