சுடச்சுட

    

    பாலவநத்தம் கிராமத்தில் தொடக்க பள்ளியின் பின்புறம் உள்ள திறந்த வெளி கிணற்றால் மாணவ, மாணவிகள் விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் உள்ளது.
      விருதுநகர் அருகே பாலவநத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது.
     இங்கு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு கழிப்பறை வசதி இல்லாததால், மாண வ, மாணவிகள் இயற்கை உபாதைக்காக திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர். பள்ளியின், பின்புறம் உள்ள சீமை கருவேல மரங்கள் பகுதியில் திறந்த வெளி கிணறு உள்ளது. இப்பகுதியில் மாணவ, மாணவிகள் செல்வதால் விபத்து ஏற்படும் நிலையுள்ளது. எனவே, மாணவ, மாணவிகளில் நலன் கருதி பள்ளியில் உடனடியாக கழிப்பறை கட்ட  வேண்டும். மேலும், பள்ளியின் பின்புறம் உள்ள திறந்த வெளி கிணறை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai