சுடச்சுட

  

  விருதுநகர் மாவட்டம் வீரசோழனில், இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
   இதையொட்டி அக்கட்சியின் மாநிலத் தலைவர் எம்.பஷீர் அஹமது, தொழிலாளர்களுக்கு இலவச வேட்டி- சேலைகளை வழங்கினார். மாடுகளுக்கு பழங்கள் கொடுக்கப்பட்டன. பின்னர் பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
   இதில் கட்சியின் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் இ.செய்யதுஜஹாங்கீர், சிவகாசி நகர பொறுப்பாளர் ஜெ.முத்துவிலாசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai