சுடச்சுட

    

    திருத்தங்கலில் நாளை அதிமுக பொதுக் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு

    By DIN  |   Published on : 17th January 2017 05:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்க உள்ளார்.
    தமிழகம் முழுவதும் ஜனவரி 17 முதல் 19-ஆம் தேதி வரை எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அதிமுக பொது செயலாளர் சசிகலா அறிவித்துள்ளர்.அதன் அடிப்படையில் திருத்தங்கலில் நகர அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. கட்சியின் நகர செயலாளர் பொன்சக்திவேல் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். ராஜபாளையத்தில் ஜனவரி 18ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டங்களில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், திரைப்பட நடிகர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள் என கட்சியினர் தெரிவித்தனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai