சுடச்சுட

    

    கலசலிங்கம் பல்கலை.யில் அமெரிக்க கட்டடவியல் சமூக மாணவர் குழு தொடக்க விழா

    By DIN  |   Published on : 19th January 2017 06:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் அமெரிக்க கட்டடவியல் சமூக மாணவர் குழு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
      கட்டடவியல் துறை சார்பில் நடைபெற்ற விழாவுக்கு இயக்குநர் டாக்டர் எஸ்.சசி ஆனந்த் தலைமை வகித்தார். துணைவேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ராம்கோ சிமெண்ட் நிறுவன துணை பொது மேலாளர் அனில்குமார் பிள்ளை, மாணவர் குழுவைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.    பேராசிரியர்கள் பி.ராஜயோகன், சண்முகம் அமுதன் ஆகியோர் மாணவர்கள் குழு செய்ய வேண்டிய செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர்.   முன்னதாக துறைத் தலைவர் எம்.முத்துக்கண்ணன் வரவேற்றார். பேராசிரியர் ஏ.சிதம்பரகணேஷ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai