சுடச்சுட

    

    முகவூர், சொக்கநாதன்புத்தூர் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு

    By DIN  |   Published on : 19th January 2017 06:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராஜபாளையம் அருகேயுள்ள முகவூர், சொக்கநாதன்புத்தூர் பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். தங்கபாண்டியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
       சொக்கநாதன்புத்தூர், முகவூர் ஊராட்சிகள் மற்றும் செட்டியார்பட்டி,சேத்தூர் பேரூராட்சிகளில் வறட்சியால் கருகிய நெல் பயிர்களை பார்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினரிடம் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வேண்டும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.    அவர்களது கோரிக்கையை ஏற்ற சட்டப்பேரவை உறுப்பினர் இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு பாதிப்பு விபரங்களை தெரியப்படுத்தி உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தினார்.
      அப்போது, திமுக பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், ராஜபாளையம் திமுக நகரச் செயலாளர் ராமமூர்த்தி, ஒன்றிய துணைச் செயலாளர் அனந்தப்பன், நகர துணைச் செயலாளர்  சரவணன் பலர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai