சுடச்சுட

  

  விதிகளுக்கு உள்பட்டு பட்டாசு தயாரித்தால் விபத்தினை தவிர்க்கலாம்: கட்டுப்பாட்டு அதிகாரி

  By DIN  |   Published on : 20th January 2017 07:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசு விதிகளுக்கு உள்பட்டு பட்டாசு தயாரித்தால் விபத்தினை தவிர்க்கலாம் என, நாக்பூர் இணைத் தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி என்.டி. சாகு அறிவுறுத்தியுள்ளார்.
     இந்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை, தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம், தி இந்தியன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம், அகில இந்திய கலர் மத்தாப்பூ தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியன இணைந்து, சிவகாசியில் வியாழக்கிழமை பட்டாசு பாதுகாப்பு கருத்தரங்கை நடத்தின.
    இந்த நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். கருத்தரங்கை, நாக்பூர் இணைத் தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி என்.டி. சாகு குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்துப் பேசியதாவது:   பட்டாசு தொடர்பான உரிமம் பெறுவது உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு, பட்டாசு ஆலை உரிமையாளர்கள் நாக்பூர் சென்று வரவேண்டிய நிலை இருந்து வந்தது. தற்போது, பட்டாசு உரிமம் பெறுவது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிவகாசியில் உள்ள அதிகாரியை சந்தித்து தீர்வு காணலாம். அதற்கான அதிகாரத்தை சிவகாசியில் உள்ள அதிகாரிக்கு வழங்கியுள்ளோம்.
    ஆலைகளில் பட்டாசு தயாரிக்கும்போது கவனமாக விதிமுறைகளைப் பின்பற்றினால்,விபத்தினை தவிர்க்கலாம். தொழிலும் பாதுகாக்கப்பட வேண்டும், தொழிலாளர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.
     சென்னை இணைத் தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி அசோக்குமார் யாதவ் பேசுகையில், இந்தத் தொழிலுக்கு அரசு ஆதரவு உண்டு. பாதுகாப்புடன் பட்டாசுத் தொழிலை செய்திட அனைவரும் உறுதியாக இருக்கவேண்டும் என்றார்.
    முன்னதாக, பட்டாசு தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்த கையேட்டினை என்.டி. சாகு வெளியிட, அதை ஆசைத்தம்பி பெற்றுக்கொண்டார். இதில், சிவகாசி துணை முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி சுந்தரேசன், தி இந்தியன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகி வெங்கடேஷ், கலர் மத்தாப்பூ உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai