சுடச்சுட

  

  விருதுநகரில் பத்திரப் பதிவுக்கான தடையை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 20th January 2017 07:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பத்திரப் பதிவு தடையை நீக்க வலியுறுத்தி, சிவகாசி பகுதியைச் சேர்ந்த இடம் விற்பனையாளர் மற்றும் முகவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பூமியிடம் மனு அளித்தனர்.
     அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்றம் பத்திரப் பதிவுக்கு தடை விதித்து பல மாதங்கள் கடந்துவிட்டன. இத்தடையை நீக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பத்திரப் பதிவுக்கு உகந்த சூழ்நிலை இல்லை.
    இதனால், இடம், நிலம் விற்பனை செய்வோர், அதை சார்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
     மேலும், குழந்தைகளின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் திருமணச் செலவுக்குக் கூட இடத்தை விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது.
   இதனால், பலரின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதுடன், வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தமிழக அரசு உடனடியாக பத்திரப் பதிவு தடை நீக்கம் செய்வதற்காக, சொத் துகளை முறைப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் செயல்படுத்த வேண்டும் என, அதில் தெரிவித்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai