சுடச்சுட

  

  விருதுநகரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெளியேற்றம்

  By DIN  |   Published on : 24th January 2017 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகரில் 6-ஆம் நாளாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்களிடம், போலீஸார் திங்கள்கிழமை அதிகாலை பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனர். கலைந்து செல்லாமல் இருந்த 20 பேரை போலீஸார் வலுக்கட்டயமாக வெளியேற்றினர்.
  விருதுநகர் தேசபந்து மைதானத்தில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்தது. அதில், தினமும் ஏராளமான, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
  ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 70 பேர் போரட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். திங்கள்கிழமை அதிகால் 4.30 மணிக்கு, துணை காவல் கண்காணிப்பாளர் குமார் தலைமையில் வந்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று பலர், போராட்டக்களத்தில் இருந்து கிளம்பி சென்றனர்.  இதை ஏற்காத 20 பேர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை வலுக்கட்டயமாக போலீஸார் வெளியேற்றினர். மேலும், உடனடியாக அப்பகுதியில் தடுப்பு அமைத்து, வெளி நபர்கள் யாரும் வராத வகையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
  போராட்டகாரர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல்களும் விடிவதற்குள் அகற்றப்பட்டன. நகர் முழுவதும் ஏராளமான போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  சிவகாசி: சிவகாசி பேருந்து நிறுத்தம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் திங்கள்கிழமை காலை 6 மணியுடன் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
  ராஜபாளையம்: ராஜபாளையத்தில் ஜல்லிகட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்ற பலர் ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே கலைந்து செல்லத் தொடங்கினர். திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு அனைவரும் சென்றுவிட்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai