சுடச்சுட

  

  விருதுநகர் மாவட்டத்தில் வறட்சி பாதிப்பு: மத்தியக் குழு ஆய்வு

  By DIN  |   Published on : 24th January 2017 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களை மத்திய குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
  விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல், பயறு மக்காச்சோளம், கம்பு, பருத்தி, வெங்காயம், மிளகாய், கரும்பு, சூரியகாந்தி போன்றவை பயிரிடப்பட்டிருந்தன. ஆனால், பருவமழை பொய்த்ததால், 75 சதவிகித விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
  விருதுநகர் மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய ஊரக வளர்ச்சி துறை (திறன் மேம்பாடு) சார்பு செயலர் எஸ்.பி.திவாரி, காவேரி மற்றும் தென்னிந்திய நதிகள் ஆணையத்தின் கண்காணிப்பு இயக்குநர் ஆர்.அழகேசன் ஆகியோர் அடங்கிய மத்திய குழுவுடன், தமிழக வேளாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி திங்கள்கிழமை வந்தனர்.
  இவர்கள், காரியாபட்டி, ஆவியூர் பகுதியில் வெங்காயம் நடவு செய்யப்பட்டிருந்த நிலங்களையும், வக்கணாங்குண்டு பகுதியில் சூரிய காந்தி நடவு செய்யப்பட்டிருந்த நிலங்களையும், அருப்புக்கோட்டை அருகே வேலாயுதபுரம், சாத்தூர் இ.முத்துலிங்காபுரம் ஆகிய இடங்களில் மக்காசோள பயிர்களையும் பார்வையிட்டனர்.
  பின்னர், விவசாயிகளிடம், செலவான தொகை குறித்து கேட்டறிந்தனர். மாவட்டத்தின் பிற பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலங்கள் குறித்து ஆட்சியர் அ. சிவஞானத்திடம் கேட்டறிந்தனர்.
  இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துக்குமரன், வருவாய் கோட்டாட்சியர்கள் செல்வி(அருப்புக்கோட்டை), கிருஷ்ணம்மாள்(சாத்தூர்), வேளாண்மைத்துறை இணை இயக்குநர் குருமூர்த்தி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai