சுடச்சுட

    

    சாத்தூர் அருகே வீட்டில் கருந்திரி வைத்திருந்தவரை வெம்பக்கோட்டை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
       விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ராமலிங்காபுரம் பகுதியில் உள்ள வீடுகளில் அனுமதியின்றி கருந்திரி தயாரிக்கப்படுவதாக, வெம்பக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வெம்பக்கோட்டை காவல் சார்பு-ஆய்வாளர் முத்துராஜ் மற்றும் போலீஸார் திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினர். அதில், கணேசன் (80) என்பவரது வீட்டில் அனுமதியின்றி கருந்திரி தயாரித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
       இதையடுத்து, வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கணேசனை கைது செய்தனர். மேலும், அவரது வீட்டிலிருந்த 600 குரோஸ் கருந்திரியை பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai