சுடச்சுட

  

  ஜல்லிக்கட்டுக்காக ரயில் மறியல்: எம்.எல்.ஏக்கள் உள்பட 675 பேர் மீது வழக்கு

  By DIN  |   Published on : 26th January 2017 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட 675 பேர் மீது போலீஸார் போலீஸார் புதன்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
  ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி விருதுநகரில் மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இவர்கள் மற்றும் திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இவர்கள், அரசு அலுவலர்களை பணி புரிய விடாமல் தடுத்ததாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் விருதுநகர் கிராம அலுவலர் பரமகுரு விருதுநகர் மேற்கு போலீஸில் புகார் அளித்தார்.
  அதன்பேரில், ஜனவரி 20-இல் ரயில் மறியலில் ஈடுபட்ட விருதுநகர் கருப்பசாமி நகரை சேர்ந்த சிவா, ராமச்சந்திரன், தமிழ் தமிழர் இயக்கத்தை சேர்ந்த சின்ன மகாலிங்கம், ராஜா, அஜீத்குமார் ரமேஷ்குமார், கிஷோர் உள்ளிட்ட 150 பேர் மீது மேற்கு போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
  திமுக சார்பில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.கே.எஸ். எஸ்.ஆர்.ஆர். ராமச்சந்திரன் (அருப்புக்கோட்டை), தங்கம் தென்னரசு (திருச்சுழி), ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் (விருதுநகர்) நகர செயலாளர் தனபால் உள்ளிட்ட 500 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். ஜனவரி 21 இல் ரயில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் பாலமுருகன் உட்பட 25 பேர் மீது  என மொத்தம் 675 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai