சுடச்சுட

  

  நரிக்குடி அருகே கோயில் பெயரில் பல லட்சம் ரூபாய் மோசடி: 4 பேர் மீது வழக்கு

  By DIN  |   Published on : 27th January 2017 07:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நரிக்குடி அருகே உள்ள கோயில் பெயரில் அனுமதியின்றி பல லட்சம் ரூபாய் நன்கொடை வசூல் செய்து மோசடி செய்யப்பட்டுள்ளது.
     விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள வீரக்குடியில் அருள்மிகு முருகைய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலை புனரமைப்பு செய்து கடந்த 2015 இல் கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்றன.
     அப்போது, இக்கோயில் நிர்வாகத்தின் அனுமதி பெறாமல், கோயிலின் புனை பெயரான கரைமேல் முருகன் என்ற பெயரில் பக்தர்களிடம் நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ. 2 ஆயிரம் நன்கொடை வழங்கும் பக்தர்கள் பெயர் கோயில் கல்வெட்டில் பொறிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டதாம்.
     போலியாக இந்த ரசீதை அச்சடித்து, வீரக்குடியைச் சேர்ந்த ராக்கா, செம்பட்டி பழனி, கரையாண்டி, சிற்பி வீரன் ஆகிய 4 பேரும் பல லட்சம் ரூபாய் வசூலித்து மோசடி செய்துள்ளனர். எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோயில் நிர்வாகி செல்வராணி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜராஜனிடம் புகார் மனு அளித்தார். அதன் அடிப்படையில், இந்த 4 பேர் மீதும் நரிக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai