சுடச்சுட

    

    சிவகாசியில் புதிய திரைப்பட சி.டி.கள் விற்பனைக்கு வைத்திருந்த மூவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
       சிவகாசி அம்பலார்மடம் மற்றும் விருதுநகர் புறவழிச் சாலையில் உள்ள திரைப்பட சி.டி.கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் சட்டவிரோதமாக புதிய திரைப்பட சி.டி.கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், போலீஸார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, அம்பலார்மடம் பகுதியில் மல்லிகை நகரைச் சேர்ந்த சிவலிங்கம் (36) என்பவரது கடையில் 45 புதிய திரைப்பட சி.டி.கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், சி.டி. பதிவு செய்து கொடுக்க கணினியும் வைத்திருந்தாராம்.
      அதேபோல், விருதுநகர் புறவழிச் சாலையில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சாரதா நகர் சாகுல்ஹமீது (75) என்பவரது கடையில் 100 புதிய திரைப்பட சி.டி.கள் இருந்துள்ளன.
      இது குறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த சி.டி.களையும், கணினியையும் பறிமுதல் செய்தனர்.
      தொடர்ந்து, திருத்தங்கலில் கடை வீதியில் உள்ள சிவகாசி நாவெட்டி நாடார் தெருவைச் சேர்ந்த சசிகுமார் (36) என்பவரது சி.டி. கடையில் போலீஸார் நடத்திய சோதனையில், புதிய திரைப்பட சி.டி.கள் 124 இருந்துள்ளன. திருத்தங்கல் போலீஸார் வழக்குப் பதிந்து சசிகுமாரை கைது செய்து, சி.டி.க்களை பறிமுதல் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai