சுடச்சுட

    

    ராஜபாளையம் அருகே சேத்தூர் ஆரம்ப சுகாதார நிலையப் பகுதியில் உள்ள முள்புதரில் பிறந்து சில மணி நேரங்களேயான பச்சிளம் ஆண் குழந்தை புதன்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது.
     அதன்பின்னர், சேத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், ஊழியர்கள் குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு, மாவட்டத் தலைமை மருத்துவமனை குழந்தைகள் காப்பக பிரிவுக்கு குழந்தையை அனுப்பி வைத்ததாக, ராஜபாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாபுஜி வியாழக்கிழமை தெரிவித்தார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai