சுடச்சுட

  

  விருதுநகர் நகராட்சிக்கு உள்பட்ட தனியார் இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை திங்கள்கிழமைக்குள் அகற்றிக்கொள்ள வேண்டும் என நகராட்சி ஆணையாளர் (பொ) ராமதிலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
     இதுகுறித்து அவர் கூறியதாவது: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுபடி சீமைக்கரு வேல மரங்கள் அகற்றும் விருதுநகர் பகுதியில் நடைபெற்று வருகிறது. நகராட்சிப் பகுதிகளில் இயங்கி வரும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான காலி இடங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேலம் மற்றும் வேலிக் கருவேலம் மரங்களை சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 30 க்குள் முழுமையாக அகற்றிட வேண்டும். இல்லையெனில் நகராட்சி நிர்வாகம் மூலம் அவை அகற்றப்பட்டு, அதற்கான செலவுத் தொகை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்கப்படும் என தெரிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai