சுடச்சுட

  

  நரிக்குடியிலிருந்து வீரசோழன் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால் பொதுமக்களும்,பள்ளி மாணவர்களும் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.             திருச்சுழி வட்டம், நரிக்குடியிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலை உள்ளது வீரசோழன் கிராமம். நரிக்குடி-வீரசோழன் ஆகிய இரு கிராமங்களுக்கிடையே புளிச்சகுளம், சித்த வண்ணாங்குளம், குறையறை வாசித்தான், முத்தனேரி, நல்லிக்குறிச்சி, ஆலங்குளம், பாப்பான்குளம் உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. தினமும் இக்கிராமங்களிலிருந்து பொது மக்களும், வியாபாரிகளும் சென்று வருகின்றனர்.
  குறிப்பாக நரிக்குடியில் உள்ள மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் திருச்சுழி, அருப்புக்கோட்டை ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகளுக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பேருந்து, சைக்கிள்கள் மூலம் சென்று வருகின்றனர்.
  ஆனால் நரிக்குடியிலிருந்து வீரசோழன் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சரக்கு வாகனங்களும், இருசக்கர வாகனங்களும் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. சிறு மழை பெய்தால் கூட பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்களும்,பள்ளி மாணவர்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே பள்ளி மாணவர்கள்,பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு நரிக்குடியிலிருந்து வீரசோழன் செல்லும் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai