Enable Javscript for better performance
மாவட்ட அளவிலான கணினிப் போட்டி: கொங்கலாபுரம் அரசு பள்ளி மாணவர் முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட அளவிலான கணினிப் போட்டி: கொங்கலாபுரம் அரசு பள்ளி மாணவர் முதலிடம்

    By DIN  |   Published on : 28th January 2017 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான கணினிப் போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர் முதலிடம் பெற்றார்.
    அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாணவர்களை பன்முகத் திறன்கள் பெற்றவர்களாக உருவாக்குவதற்கான சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    இதன் தொடர்ச்சியாக டெக்னோ கிளப் மூலம் ஒவ்வொரு வட்டார அளவில் கணினிப் போட்டி நடத்தப்பட்டது. இதில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு விருதுநகரில் மாவட்ட அளவிலான போட்டி நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்திலிருந்து கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவர் மு.அரசு உடையார் கலந்து கொண்டு முதலிடம் பெற்றார்.
    மேலும் மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் இப் பள்ளியின் 5-ம் வகுப்பு மாணவி வி.கெளசல்யா முதலிடம் பெற்றார். இரண்டாம் இடத்தை இதே பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவி ரா.அபிராமி பெற்றார்.
    வெற்றி பெற்ற மாணவர்களையும், இவர்களை சிறப்பாக பயிற்றுவித்து, ஊக்குவித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கி.ஸ்ரீதர், மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பெ.ஜெயக்குமார், இடைநிலை ஆசிரியை ம.அருள் ஆகியோரை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அனுராதா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி த.முத்துச்செல்வி மற்றும் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai