சுடச்சுட

    

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து சனிக்கிழமை கல்லூரி வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின.
    முகாமுக்கு முதல்வர் கே.சுப்பிரமணி தலைமை வகித்தார். இயக்குநர் விக்னேஷ்வரி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கணேசன் வரவேற்றார். தாளாளர் ஆர்.சோலைச்சாமி தொடங்கி வைத்தார்.
    மருத்துவர்கள் அனிருத், உத்பால் ஆகியோர் தலைமையிலான குழு சிகிச்சை அளித்தது. இதில் 19 நபர்கள் அறுவை சிகிச்சைக்காக திருநெல்வேலி அழைத்துசத் செல்லப்பட்டனர். பேராசிரியர் அருண்குமார் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai