சுடச்சுட

  

  விருதுநகர் அரசு மருத்துவமனையில் செவிலியர் விடுதியாக மாறிய தீக்காய பிரிவு புதிய கட்டடம்

  By DIN  |   Published on : 30th January 2017 06:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் அரசு மருத்துவமனையில் ரூ. ஒரு கோடியில் கட்டப்பட்ட வெளி நோயாளிகள் பிரிவு கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது. ரூ. 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தீக்காய பிரிவு கட்டடம் செவிலியர் மாணவிகள் தங்கும் விடுதியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை ராமமூர்த்தி சாலையில் உள்ளது. இதில் உள் நோயாளியாக 200 பேரும், வெளி நோயாளிகளாக தினமும் 600 க்கும் மேற்பட்டோரும் சிகிச்சை பெறுகின்றனர்.
  வெளி நோயாளிகள் பிரிவில் போதிய இடவசதி இல்லாததால் ரூ. ஒரு கோடி மதிப்பீட்டில் இரண்டு மாடி கட்டடம் கட்டப்பட்டது. மேலும், ரூ.75 லட்சம் மதிப்பில் தீக்காய பிரிவுக்கு தனியாக புதிய கட்டடமும் கட்டி முடிக்கப்பட்டது. பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் இந்த கட்டங்கள் திறக்கப்படவில்லை. சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அவரது உறவினர்கள் இடவசதியின்றி அவதிப்படுகின்றனர்.
  மருத்துவமனையில் உள்ள செவிலியர் பயிற்சி கல்லூரியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். புதிதாகக் கட்டப்பட்ட, தீக்காய பிரிவு கட்டடம் செவிலியர் பயிற்சி மாணவிகள் தங்கும் விடுதியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  எனவே, நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் நலன் கருதி கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டடங்களை உரிய பயன்பாட்டுக்குத் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai