சுடச்சுட

  

  குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக் கோரி சோலைக்கவுண்டன்பட்டி கிராம மக்கள், மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானத்திடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
  மனுவில் கூறியிருப்பதாவவது: காரியாபட்டி ஒன்றியம் அழகியநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட சோலைக்கவுண்டன்பட்டியில் சுமார் 375 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு, பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி உள்ளது.
   ஊருக்கு வெளியில் அய்யனார் கோயில் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. தற்போது, அதில், தண்ணீர் வற்றி விட்டதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பத்து நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வழங்கப்படுகிறது. மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டியும் சேதமடைந்துள்ளது. இதனால், தொட்டியின் உள்ளே இறங்கி சுத்தம் செய்ய முடியாத நிலை உள்ளது.
  மேலும் உப்புத் தண்ணீர் வரக் கூடிய இரு அடிகுழாய்களும் பழுதடைந்துள்ளது. தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை. பெண்களுக்கான பொது கழிப்பறை இல்லை. எனவே, மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை சீரமைத்து முறையாக குடிநீர் வழங்கவும், பெண்களுக்கான சுகாதார வளாகம் அமைப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்த தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai