Enable Javscript for better performance
இயற்கை விவசாய கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசி எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் சார்பில் திங்கள்கிழமை இயற்கை விவசாயம் மற்றும் மூலிகை உற்பத்தி என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் த.சசிரேகா தலைமை வகித்தார்.  மருதம் இணையதள ஆசிரியர் கே.எஸ்.அமுதா சிறப்புரையாற்றி பேசியதாவது:
          இயற்கை முறையில் விவசாயம் செய்து அந்த பொருள்களை பயன்படுத்தினால், நோயின் தாக்கம் குறையும். மாணவிகள் இயற்கை விவசாயம் குறித்தும், இயற்கை மூலிகையின் சிறப்புக்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார். முன்னதாக, ஒருங்கிணைப்பாளர் ஆ.பத்மபிரியா வரவேற்றார். உதவிப் பேராசிரியர் செண்பகவள்ளி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai