Enable Javscript for better performance
இடநெருக்கடி, சுவர்களில் விரிசல்: சாத்தூர் போக்குவரத்து பணிமனையை சீரமைக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    இடநெருக்கடி, சுவர்களில் விரிசல்: சாத்தூர் போக்குவரத்து பணிமனையை சீரமைக்க கோரிக்கை

    By DIN  |   Published on : 22nd October 2017 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தூர் போக்குவரத்துக்கழக பணிமனை சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அதனை போர்க்கால அடிப்படையில்  சீரமைக்க வேண்டும் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
       விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே போக்குவரத்துக்கழகப்  பணிமனை உள்ளது. இந்த பணிமனை கட்டபட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. சாத்தூர்-மதுரை நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள பணிமனை கட்டடம் அமைக்கும்போது அப்போதைய பேருந்து எண்ணிக்கைக்கு ஏற்ப அமைக்கபட்டது. ஆனால்,தற்போது அதிகளவில் பேருந்துகள் உள்ளதால் பணிமனையில் பேருந்துகள் இடநெருக்கடியில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. மேலும் பணிமனை கட்டடமும் மிக மோசமான நிலையில் உள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் தங்கும் அறை, கழிப்பறை, சமையலறை உள்ளிட்ட அறைகள் மிகவும் சேதமடைந்த நிலையில், சுவர்களில் விரிசல் விட்டு காணப்படுகிறது. மேலும் பணிமனை ஊழியர்கள் தங்கும் அறைக்கு மேல் மாடியில்  உள்ள தண்ணீர் தொட்டி முறையாகப் பராமரிக்கப்படாததால் சிதிலமைடந்து இடியும் நிலையில் உள்ளது. மேலும் பேருந்து பணிமனை மிக சிறிய அளவில் இருப்பதால், புதிய இடத்தை தேர்வு செய்து அல்லது அதே இடத்தில் இன்னும் பணிமனையை விரிவுபடுத்தி கட்டடங்கள் அமைக்க வேண்டும் என போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.   ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் போர்கால அடிப்படையில் சாத்தூர் போக்குவரத்து பணிமனையை முறையாக ஆய்வு செய்து,கட்டடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai