காரியாபட்டி அருகே கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். மேலும், அவர்டமிருந்த 315 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தநர்.
காரியாபட்டி- கள்ளிக்குடி செல்லும் சாலையில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காரியாபட்டி காவல் உதவி ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், யோகேஸ்குமார் தலைமையிலான போலீஸார் கள்ளிக்குடி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை போலீஸார் பிடித்தனர். பின்னர், அவர்களை சோதனை செய்தபோது சிறு சிறு பொட்டலங்களாக 315 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரிந்தது.
விசாரணையில் காரியாபட்டி, அச்சம்பட்டியை சேர்ந்த கதிரேசன் மகன் குமார்(27), பாண்டி மகன் பால்பாண்டி(29), தொட்டியங்குளம் தேவேந்திரன் (35) என தெரிந்தது.
அவர்களை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.