அருப்புக்கோட்டை அருகே வேகத்தடை அமைக்கக் கோரி சாலை மறியல்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆலடிபட்டியில் அதிவேக பேருந்துகளால் தொடர்ந்து நடைபெறும் விபத்துக்களைத் தடுக்கக் கோரி சனிக்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆலடிபட்டியில் அதிவேக பேருந்துகளால் தொடர்ந்து நடைபெறும் விபத்துக்களைத் தடுக்கக் கோரி சனிக்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டையிலிருந்து கமுதி செல்லும் சாலையில் ஆலடிபட்டி விலக்கு உள்ளது. இச்சாலையில் ஆலடிபட்டி கிராம  மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை இரவு சுமார் 8 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
அருப்புக்கோட்டை- கமுதி சாலை கடந்த ஆண்டு சீரமைக்கப்பட்டது. அப்போது ஆலடிபட்டி விலக்கு பேருந்து நிறுத்தம் அருகே ஏற்கெனவே இருந்த வேகத்தடை சாலை அமைக்கும் பணி காரணமாக அகற்றப்பட்டது. இதனால் இப்பகுதியில் வரும் பேருந்துகள் அதிவேகமாக வருவதும் அதனால் அடிக்கடி விபத்துக்கள் நேர்வதும் வாடிக்கையாகி விட்டது.
சனிக்கிழமை இரவு  வேகமாக வந்த அரசுப் பேருந்து ஒன்று சாலையோரம் காத்திருந்தவர்கள் மீது மோதும் அளவிற்கு வந்து கடந்து சென்றது.  எனவே தடையை மீறி அதிவேகமாகச் செல்லும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் இச்சாலை மறியலில் ஈடுபடு
கிறோம் என அவர்கள் தெரிவித்தனர். 
தகவலறிந்து அங்கு வந்த ம.ரெட்டியபட்டி காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் சமரசம் பேசியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com