அய்யம்பட்டி கண்மாயை ஆக்கிரமித்து வெள்ளரிக்காய் விவசாயம்: தண்ணீர் கிடைக்காமல் கால்நடைகள் அவதி

சாத்தூர் வட்டம் அய்யம்பட்டி கண்மாய்க்குள் சிலர் ஆக்கிரமித்து வெள்ளரிக்காய் விவசாயம் செய்வதால் கால்நடைகள் தண்ணீர் குடிக்க செல்ல முடியாத

சாத்தூர் வட்டம் அய்யம்பட்டி கண்மாய்க்குள் சிலர் ஆக்கிரமித்து வெள்ளரிக்காய் விவசாயம் செய்வதால் கால்நடைகள் தண்ணீர் குடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானத்திடம் கிராம மக்கள் மனு 
அளித்தனர்.
    ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தின்போது அவர்கள் அளித்த மனு விவரம்:
  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் உப்பத்தூர் அருகே அய்யம்பட்டியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்திற்கு சொந்தமான கண்மாய் மூலம் நன்செய் பயிர்கள், பயறு வகைகள் விவசாயம் செய்து வருகிறோம். மேலும், இக்கண்மாயை கால்நடைகள் மேயும் பகுதியாகவும், அவை தண்ணீர் குடிப்பதற்காகவும் பயன்படுத்தி வருகிறோம். 
 இந்நிலையில், கண்மாய் நீர்பிடிப்பு பகுதியை நென்மேனி பிர்க்கா வன்னிமடை கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து வெள்ளரி விவசாயம் செய்துள்ளனர். இதன் காரணமாக கண்மாய் பகுதிக்குள்  மேய்ச்சலுக்காவோ, தண்ணீர் குடிக்கவோ கால்நடைகள் செல்ல முடியவில்லை. மேலும் விவசாய பகுதிக்குள் செல்லும் கால்நடைகள் தாக்கப்படுகின்றன. இது குறித்து அவர்களிடம் கேட்டால் எங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு 
செய்ய வேண்டும். மேலும், கண்மாய் ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com