சாத்தூரில் குடியிருப்புகள் அருகே கழிவுநீர் தேக்கம்: வாருகால் அமைக்க நகராட்சிக்கு கோரிக்கை

சாத்தூர் நகராட்சி பகுதியில் குடியிருப்பு அருகே கழிவு நீர் தேங்குவதை தடுக்க வாருகால் அமைக்க  நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சாத்தூர் நகராட்சி பகுதியில் குடியிருப்பு அருகே கழிவு நீர் தேங்குவதை தடுக்க வாருகால் அமைக்க  நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
       விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சியில் 16, 17 , 24 ஆவது வார்டுகளுக்கு உள்பட்ட நகராட்சி காலனி, தேரடிதெரு 
உள்ளிட்ட  பகுதிகளில் சுமார்ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருக்களின் பின்புறம் 
ரயில்வே தண்டவாளத்தின் அருகே கழிவு நீர் அதிகமாகத் தேங்கியு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு டெங்கு உள்ளிட்ட மர்மக் காய்ச்சல்கள் பரவி வருகின்றன. மேலும் அப்பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளதால் சிறு குழந்தைகள் நோய்களால் அதிகமாக பாதிக்கபடுகின்றன. கழிவுநீர் அதிகமாக தேங்குவதால், சில சமயம் குடிநீரில் கழிவு நீர் கலந்துவிடுவதாகவும் அப்பகுதியில் வசிப்பவர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். எனவே முறையான வாருகால் அமைத்து, கழிவுநீர் தேங்காதவாறு வாருகால் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கழிவு நீரை வைப்பாறு பகுதியில்  கலந்துவிடப்படுவதால் நிலத்தடி நீர் மாசுபடுவதாவும் புகார் கூறினர். 
 இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மகேஷ்வரன்கூறியது: 
 இந்தபகுதியில் முறையான வாருகால் அமைக்காததால் கழிவுநீ ர் தேங்கி, தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கொசுத் தொல்லையும் அதிகமாக உள்ளது. இந்த வாருகால் பிரச்னை குறித்து நகராட்சி நிர்வாகத்தில் பலமுறை முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கபடவில்லை. மேலும் கடந்த ஆட்சியி ல் இங்கு வாருகால் அமைப்பதற்காக 8 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பாதியளவே வாருகால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் முழுமையாக வாருகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்துநகராட்சி அதிகாரிகள்கூறியது: இந்த பகுதியில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடமும் உள்ளதால் கழிவுநீர் வாருகால் அமைக்கமுடியவில்லை. கழிவுநீரை சுத்தம் செய்யவேண்டுமென்றாலும் ரயில்வே துறையினரின் அனுமதிபெறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com